திருமண பந்தத்தை முறித்தார் சாய்னா நேவால்

x

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கணவரை பிரிவதாக அறிவிப்பு

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார். உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்ந்த சாய்னா நேவாலுக்கும் இந்திய முன்னாள் பேட்மிண்டன் வீரர் பருபுல்லி காஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடந்து, இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்தனர்.இந்நிலையில், தனது 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவு செய்து பிரிவதாக அறிவித்துள்ளார். ஆனால், கணவரை பிரிவதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.


Next Story

மேலும் செய்திகள்