"சாகர் கவாச்" ஒத்திகை - தமிழகத்தின் கடலோர பகுதிகளில் அதிரடி ஆக்ஷனில் இறங்கிய இந்திய கடலோர காவல்படை
கடல் வழியாக தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவுவதை தடுக்கும் விதமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் "சாகர் கவாச்" என்ற ஒத்திகை நடைபெற்றது..
சென்னை மெரினா கடற்கரையில் சாகர் கவாச் ஒத்திகை நடைபெற்றது. இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமம், உள்ளிட்டோர் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டத்தில் நாகை, கோடியக்கரை, வேதாரண்யம் கடற்பகுதிகளில் "சாகர் கவாச்" ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்றவர்களை கைது செய்து ஒத்திகையில் ஈடுபட்டனர்.
கடலூரில் சாகர் கவாச் ஒத்திகையில் கடலூர் துறைமுகத்தை தகர்க்க போலி வெடிகுண்டு உடன் வந்த 5 பேரை வீரர்கள் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை கடலோர பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சாகர் கவாச் ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் மீனவர்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கினர்.
