Jeganath Mishra | TVK | சபரிமலை சீசன் முன்னேற்பாடு-கம்பமெட்டு மலைச்சாலையில் MLA ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு
Jeganath Mishra | TVK | சபரிமலை சீசன் முன்னேற்பாடு - கம்பமெட்டு மலைச்சாலையில் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு
#jeganathmishra #tvk #thanthitv
சபரிமலை சீசன் முன்னேற்பாடு - கம்பமெட்டு மலைச்சாலையில் எம்.எல்.ஏ. ஆய்வு சபரிமலை ஐயப்பன் கோவில் சீசனை முன்னிட்டு, கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, பல்வேறு துறை அதிகாரிகளுடன் இணைந்து கம்பமெட்டு மலைச்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாகச் சென்ற அவர், சாலையிலுள்ள பள்ளங்களைச் சீரமைத்தல், ஆபத்தான மரக்கிளைகளை அகற்றுதல், சாலையோர முட்புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, கம்பமெட்டு சோதனைச் சாவடியில் புதிய கட்டிடம் மற்றும் பொதுமக்களுக்கான கழிப்பிட வசதிகள் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாக ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்தார்.
