Russia Ukraine War | வெறியாட்டம் ஆடும் ரஷ்யா... தலைநகருக்கே குறி - உச்சகட்ட பதற்றம்
வெறியாட்டம் ஆடும் ரஷ்யா... தலைநகருக்கே குறி - உச்சகட்ட பதற்றம்
உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் நடத்தி இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் தற்போது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகரான கீவில் ரஷ்யா ட்ரோன் தாக்குதலை நடத்தி உள்ளது.
ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்குள்ள கட்டடங்கள் பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தன.
உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு, பதில் தாக்குதல்தான் நடத்தப்பட்டு இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.
அதே சமயம் 315 ட்ரோன்கள், 7 ஏவுகணைகளைக் கொண்டு இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தி இருப்பதாகவும், ஒடேசா நகரின் குடியிருப்புப் பகுதிகள், கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும் உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.