திருச்செந்தூர் கோயில் தொடர்பாக பரவும் தகவல் - உண்மை என்ன?
"திருச்செந்தூர் கோயில் விடுதி மேலாளராக கிறிஸ்தவர் நியமனம் என வதந்தி"
திருச்செந்தூர் முருகன் கோயில் விடுதி மேலாளராக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரை அறநிலையத்துறை நியமித்ததாக வெளியான தகவல் வதந்தி என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது.
திருச்செந்தூரில் கோயில் வளாகத்தில் உள்ள விடுதியின் மேனேஜராக, ஜான் என்ற கிறிஸ்தவர் உள்ளதாக குறிப்பிட்டு ஒரு படம் பகிரப்பட்டு வந்த நிலையில், புகைப்படத்தில் குறிப்பிடப்பட்ட ஜான் என்பவர் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் அல்ல என்றும் அவர் தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர் என்றும் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட கோயில் விடுதியின் மேலாளராக ஹரி என்பவர் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
