ரம்மி விளையாட்டில் கடன் பிரச்சனை - இளைஞர் தற்கொலை

ரம்மி விளையாட்டில் கடன் பிரச்சனை - இளைஞர் தற்கொலை
Published on
• ஆண்டிமடம் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட கடன் பிரச்சனையால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். • கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மருங்கூரை சேர்ந்த 21 வயதான பிரேமதாஸ் என்பவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட கடன் பிரச்சனையால், வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை எடுத்துக் கொண்டு, அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான்சாவடி கிராமம் அருகே சேனா பள்ளம் செல்லும் பகுதியில் களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு கீழே கிடந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கபட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com