நள்ளிரவில் நாசமான நடைபாதை - மர்ம நபர்கள் அட்டூழியம்

குமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் மேம்பாலத்தின் கீழ் இருந்த நடைபாதையை மர்ம நபர்கள் இரவோடு இரவாக இடித்து தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போக்குவரத்து நெருக்கடியை நிவர்த்தி செய்யும் நோக்கில், பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.பி.யாக பதவி வகித்தபோது அமைக்கப்பட்ட நடைபாதையை ஒரு கும்பல், நவீன இயந்திரங்களை கொண்டு இடித்து விட்டு, வணிக வளாகத்திற்கு படிக்கட்டுகள் அமைக்க முயற்சி செய்தது. இதையறிந்த நிர்வாகிகள் ஒன்று திரண்டு சென்று, நடைபாதை இடிப்பு பணிகளை தடுத்து நிறுத்தியதுடன், வாகனம் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com