குனியமுத்தூர், கோவை ||கோவையில் இரும்புக் கம்பியுடன் ரகளை - வாகனங்களை தாக்கிய நபர்

கோவையில் இரும்புக் கம்பியுடன் ரகளை - வாகனங்களை தாக்கிய நபர்

கோவை குனியமுத்தூர் பகுதியில் கையில் இரும்புக் கம்பியுடன் சாலையில் சென்ற வாகனங்களை மர்ம நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குனியமுத்தூர் வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களை வழிமறித்த அந்த நபர், கையில் வைத்திருந்த இரும்புக் கம்பியால் திடீரென வாகனங்களை ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தாமல் வேகமாக அங்கிருந்து சென்றனர். சம்பவத்தை பார்த்த சில பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், தங்களது செல்போன்களில் காட்சிகளை பதிவு செய்தனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார், எதற்காக வாகனங்களை தாக்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com