

நாடு முழுவதும் பெருநகரங்களில் சேர்ந்துள்ள குப்பைகளை நவீன முறையில் அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய அவர், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சேர்ந்துள்ள குப்பைகளின் காரணமாக பெருமளவு மாசு ஏற்படுவதாக சுட்டிக் காட்டினார். பெரு நகரங்களில், குப்பைகள் சேர்ந்து இருப்பது கவலை அளிக்கக்கூடிய விஷயம் எனவும், அதனை அகற்ற பயோ மைனிங் முறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். கழிவுகள் இல்லாத நிலையை விரைவில் அடைவோம் எனவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.