ரூ.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்...

மாதவரம் கவுண்டர்பாளையம் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்...

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் கவுண்டர்பாளையம் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் கிலோ செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜேஷ், பூபதி ஆகிய இருவரை கைது செய்துள்ள மாதவரம் போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ஐந்து கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com