தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை - ரூ.40 லட்சம் பணம் பறிமுதல்

குடியாத்தம் அருகே, தொழிலதிபருக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில், 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை - ரூ.40 லட்சம் பணம் பறிமுதல்
Published on
பள்ளிகொண்டா கிராமத்தில் வசித்து வரும் கமலக்கண்ணன், பல்பொருள் அங்காடி, மருந்தகம் உள்ளிட்ட பல தொழில்களை செய்து வருகிறார். அவரின் இல்லம், அலுவலகம் சொந்தமான இடங்களில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். இறுதியில் கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை குறித்து தொழிலதிபர் கமலக்கண்ணனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com