ரூ.22 லட்சமான ரூ.2 லட்சம்.. ஈரோடே ஷாக்கான செய்தி.. கலெக்டர் வரை வந்த பேப்பர்..

x

வசூலிப்பதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

ஈரோடு அருகே 2 லட்ச ரூபாய் கடனுக்கு 22 லட்ச ரூபாய் கட்ட சொல்லி வற்புறுத்துவதாக பாதிக்கப்பட்டவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளனர். பூம்பூம் மாட்டுக்காரர்களான பண்டாரப்பன் சகோதரர்கள், மாதப்பன் என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பணம் கட்ட தாமதமானதால், பண்டாரப்பனின் வீட்டு பெண்களை மாதப்பன் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. தற்போது, 22 லட்ச ரூபாய் வரை கட்ட வேண்டும் என்றும், மாதம் 65 ஆயிரம் ரூபாய் வட்டி கட்ட வேண்டும் என்றும் மாதப்பன் கட்டாயப்படுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்