Police | Scam | Gold | போலி ஆவணங்கள் மூலம் ரூ.51 லட்சம் மோசடி - ஒருவர் கைது
Police | Scam | Gold | போலி ஆவணங்கள் மூலம் ரூ.51 லட்சம் மோசடி - ஒருவர் கைது #Police #Scam #Gold போலி ஆவணங்கள் தயாரித்து அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்பதாகக் கூறி, சுமார் 51 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்... அரியாங்குப்பத்தைச் சேர்ந்த முத்துக்குமரன், வங்கியில் 8 கிராம் நகைகளை மட்டுமே அடமானம் வைத்துவிட்டு, 460 கிராம் நகைகள் அடமானம் வைத்திருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்துள்ளார். இதனை நம்பிய சென்னையைச் சேர்ந்த நிறுவன மேலாளர் ராமானுஜம், நகைகளை மீட்பதற்காக 35 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயை முத்துக்குமரனின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர், வங்கிக்கு வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதேபோல், சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் மேலும் பலரை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளைப் பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்தம் 50 லட்சத்து 99 ஆயிரத்து 990 ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் முத்துக்குமரனை கைது செய்த போலீசார், காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
