Chennai Trending News | சென்னை வந்த இளைஞரின் `மலக்குடலில்’ரூ.40 லட்சம் - அரண்டுபோன அதிகாரிகள்

x

ரூ.65.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் நூதன முறையில் கடத்தல்

துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு நூதன முறையில் 700 கிராம் தங்கத்தை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயில் இருந்து கொல்கத்தா வழியாக சென்னை வந்த இளைஞரை சோதனை செய்தனர். அப்போது, மலக்குடலில் மாத்திரை வடிவில் 409 கிராம் தங்க பசையை கடத்தி வந்த‌து தெரிய வந்த‌து. இதையடுத்து இனிமா கொடுத்து வெளியே எடுத்தனர். இதே போன்று, சிங்கப்பூரில் இருந்து வந்த இளைஞரிடம் 150 கிராம் தங்கமும், துபாயில் இருந்து வந்த இளைஞரிடம் 147 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு, 65 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்கத்தை கடத்தி வந்த 3 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்