சென்னையில் ரூ.23 கோடி வைரம் கொள்ளை - கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?.. அதிர்ச்சி வாக்குமூலம்

x

சென்னை வடபழனியில் 23 கோடி ரூபாய் மதிப்பிலான வைரத்தை கொள்ளையடித்த விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, கைதான 4 பேரும் youtube வீடியோக்களை பார்த்து எவ்வாறு வைரத்தை வாங்குவது, எவ்வாறு மதிப்பிடுவது உள்ளிட்டவற்றை கற்றுக் கொண்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். அதற்கு தேவையான உபகரணங்களை ஆன்லைன் மூலமாக வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உபகரணங்களை பயன்படுத்திதான் சந்திரசேகரிடம் இருந்து வைரத்தை ஆய்வு செய்து கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் பறிமுதல் செய்யப்பட்ட வைரம் உண்மையான வைரமா என்பது குறித்து கண்டறிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட வைரம் புராதான வைரமா என்ற கோணத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சந்திரசேகரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்