Vellore Court | பீர் பாட்டிலுக்கு ரூ.20 கூடுதல் வசூல் - ரூ.1 கோடி அபராதம்.. இடியை இறக்கிய கோர்ட்

பீர் பாட்டிலுக்கு ரூ.20 கூடுதல் வசூல் - ரூ.1 கோடி அபராதம்.. இடியை இறக்கிய கோர்ட்

#Vellore #Court #Judgement #Beer #BeerBottle #Penalty #ThanthiTV

Vellore Court | பீர் பாட்டிலுக்கு ரூ.20 கூடுதல் வசூல் - ரூ.1 கோடி அபராதம்.. இடியை இறக்கிய கோர்ட் ராணிப்பேட்டையில் பீர் பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில், டாஸ்மாக் கடையை மூடவும், ஒரு கோடி ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செலுத்தவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராணிப்பேட்டையைச் சேர்ந்த சக்திவேல், மூன்று பீர் பாட்டில்களுக்கு 510 ரூபாய்க்குப் பதிலாக 570 ரூபாய் வசூலிக்கப்பட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சக்திவேலுக்கு 3,000 ரூபாய் இழப்பீடும், வழக்குச் செலவாக ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கவும் அரசுக்கு அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com