சாமானிய பெண்ணுக்கு ரூ.1.7 கோடி - வேலூரே அதிர்ந்த சம்பவம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே விவசாயம் செய்யும் பெண்ணுக்கு 1.70 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி செலுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. வெள்ளேரி கிராமத்தைச் சேர்ந்த கவிதாவிற்கு அஞ்சல் துறை மூலம் வந்த கடிதத்தில் தர்ஷினி என்ற நிறுவனம் தங்கள் பெயரில் இயங்கி வருவதாகவும், ஜிஎஸ்டி வரி பாக்கியான 1.70 கோடியை கட்டுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கவிதா, தனது கணவர் பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Next Story
