இஎஸ்ஐ ஹாஸ்பிட்டலில் ரூ.16 கோடி முறைகேடு?- வெளிக்கொண்டு வந்த 6 MLA-க்கள் டீம்

திண்டுக்கல் இஎஸ்ஐ மருத்துவமனையில் 16 கோடி ரூபாய்க்கு மருந்து வாங்கியதாக கணக்கு காட்டி முறைகேடு நடந்துள்ளதாக சட்டமன்ற பொதுக்குழு தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். 6 எம்எல்ஏக்கள் கொண்ட குழுவுடன் ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். கடந்த 2016 - 17 ஆம் ஆண்டு 16 கோடிக்கு, மருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், எதற்காக கூடுதலாக வாங்கப்பட்டது என சரியான காரணம் கூறப்படவில்லை என்று செல்வப் பெருந்தகை கூறினார். முறைகேடு நடந்துள்ளதா என்று, துறை ரீதியில் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த அவர், அப்போது பணியில் இருந்த அதிகாரியின் பென்ஷன் உள்ளிட்ட பண பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com