தம்பி சமாதியில் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி-பகீர் வீடியோ

x

தம்பி சமாதியில் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்- ரவுடி கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தம்பி சமாதியில் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சந்த வேலூரை சேர்ந்த ராஜ்குமார் 2 ஆண்டுகளுக்கு முன் கஞ்சா போதையில் ஆட்டோ ஓட்டி சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இந்நிலையில், அவரது பிறந்த நாளை சமாதியில் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி கொண்டாடிய அவரது அண்ணன் ஐயப்பனை போலீசார் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்