அப்பாவின் சடலம் முன்பு மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்த ரவுடி நாகேந்திரனின் இளைய மகன்

x

உயிரிழந்த பிரபல ரவுடி நாகேந்திரனின் உடலுக்கு முன்பு அவரது இளைய மகனின் திருமணம் நடைபெற்ற சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது.

சென்னையில் பிரபல தாதாவாக இருந்தவர் நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் நபராக வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் இருந்து வந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். தந்தையின் மரணத்திற்காக சிறையில் இருந்த நாகேந்திரனின் இரண்டாவது மகன் அஜித் ராஜ், பரோலில் வெளியே வந்தார். அஜித்திற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஷகினா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தந்தையின் பூத உடல் முன்பு இருவரும் கண்ணீர் மல்க திருமணம் செய்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்