இளம் பெண்ணின் மாஸ்டர் ஸ்கெட்ச்.. ஆசை வலையில் சிக்கிய ரவுடி - சுத்துப்போட்டு தீர்த்து கட்டிய கொடூரம்

சென்னையை சேர்ந்த ரவுடி சத்யா, கடந்த 10-ம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன் விரோதம் காரணமாகவே ரவுடி சத்யா கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இரு தரப்பினரிடையே நடந்த ஐந்தாவது கொலை எனவும் போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் மிசோரத்தை சேர்ந்த இளம்பெண் மூலமாக செல்போனில் அழைத்து சத்யாவை வரவழைத்திருப்பதும், சத்யா வந்தவுடன் 10 பேர் கொண்ட கும்பல் மறைந்திருந்து சரமாக தாக்கி கொலை செய்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து மிசோரம் இளம்பெண் உட்பட மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com