போலீசாரிடம் சிக்கினார் ரவுடி பினு

பிரபல ரவுடி பினுவை, நேற்று இரவு சென்னை எழும்பூர் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசாரிடம் சிக்கினார் ரவுடி பினு
Published on
பிரபல ரவுடி பினுவை, நேற்று இரவு சென்னை எழும்பூர் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில், தனது பிறந்த நாளன்று அவர் அரிவாளால் கேக் வெட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ரவுடி பினு. நேற்றையதினம் சிந்தாதரிபேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற காரில் ரவுடி பினுவை கண்டுள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் பல இடங்களில் ரவுடிகளின் கைது நடவடிக்கை தொடர்ந்து வரும்நிலையில், கைதில் இருந்து தப்பிப்பதற்காக பினு தன் பெயரை போலீசாரிடம் மாற்றி கூறியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து காரில் இருந்த அனைவரையும் காவல்நிலையம் அழைத்து சென்ற போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com