வீர தம்பதி வீட்டில் கொள்ளை முயற்சி வழக்கு -தனிப்படை போலீஸிடம் சிக்கிய ரவுடி கைது

நெல்லை வீர தம்பதி வீட்டில் கொள்ளையர்கள் புகுந்த வழக்கில், ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வீர தம்பதி வீட்டில் கொள்ளை முயற்சி வழக்கு -தனிப்படை போலீஸிடம் சிக்கிய ரவுடி கைது
Published on

அங்குள்ள கல்யாணிபுரம் கிராமத்தில் வசித்து வரும் வயதான விவசாய தம்பதி சண்முகவேல்- செந்தாமரை வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்களை விரட்டியடித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, வயதான தம்பதியின் துணிச்சலை பாராட்டி தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்தது. இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார், கடந்த 50 நாட்களுக்கு மேலாக 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த வழக்கில் ரவுடி ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த நபரை ரகசிய இடத்தில் வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com