போலீசாரை பழி வாங்க போவதாக டிக்டாக்கில் சபதம் போட்டவர்கள் கைது...

போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் மரணத்திற்கு பழி தீர்க்கப் போவதாக டிக்டாக்கில் சபதம் போட்ட அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசாரை பழி வாங்க போவதாக டிக்டாக்கில் சபதம் போட்டவர்கள் கைது...
Published on

போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் மரணத்திற்கு பழி தீர்க்கப் போவதாக டிக்டாக்கில் சபதம் போட்ட அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராயப்பேட்டை சேர்ந்த ரவுடி ஆனந்தன் தரமணி அருகே என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், ரவுடி ஆனந்தன் புதைக்கப்பட்ட சுடுகாட்டிற்குச் சென்ற அவரது நண்பர்கள் 6 பேர், ஆனந்தனின் மரணத்திற்கு காரணமான போலீசாரை பழி தீர்ப்போம் என பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதனையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com