கல்லூரி மாணவர்கள் இடையே "ரூட்டு தல" மோதல்: பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்-போலீசார் நடவடிக்கை

சென்னையில் ரூட்டு தல மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
கல்லூரி மாணவர்கள் இடையே "ரூட்டு தல" மோதல்: பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்-போலீசார் நடவடிக்கை
Published on

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் வியாசர்பாடி அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் ஏற்கனவே ரூட் தல மோதலில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கல்லூரி தேர்வு முடிந்து கடைசி நாளான நேற்று மாதவரம் பேருந்து நிலையம் அருகே இரு கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது

இதில் ஒரு மாணவருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து அம்பேத்கர் கல்லூரி சேர்ந்த 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் தப்பியோடிய 4 பச்சையப்பன் கல்லூரி மாணவர்களையும் போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். இரண்டு தரப்பு மாணவர்களிடம் இருந்தும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com