தம்பி திருமணம்.. அப்பாவை கட்டி போட்டு -அக்கா செய்த காரியம்.. ஈரோட்டில் அதிர்ச்சி

ஈரோடு அருகே தந்தையை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னிமலை அர்த்தநாரிபாளையம் பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணண் என்பவர் தனியார் வங்கியின் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் வீட்டில் அவரது தந்தை விஸ்வநாதன் மற்றும் அக்கா ரம்யா ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர். திடீரென வீட்டிற்குள் நுழைந்த முகமூடி அணிந்த மூன்று பேர் இருவரையும் கட்டி போட்டுவிட்டு திருமணத்துக்காக பீரோவில் வைத்திருந்த ரூபாய் 3 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தொடர்ந்து, அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ரம்யாவின் கணவர் செய்துவந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் பல்வேறு இடங்களில் கடன் கேட்டது தெரியவந்தது. அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், நண்பர்கள் மூலம் பணத்தை திருடி விட்டு நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். உடன் பிறந்த சகோதரியே பணத்தை திருடிவிட்டு நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com