குலசையில் இருந்து ராக்கெட்.. திருப்பதியில் ISRO தலைவர் கொடுத்த சர்ப்ரைஸ்..
டிசம்பர் மாதம் குலசையில் இருந்து ராக்கெட் ஏவப்படும்"
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு டிசம்பரில் இருந்து ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டின் முதல் ராக்கெட்டாக வரும் 12ம் தேதி பிஎஸ்எல்வி சி 62 விண்ணில் ஏவப்படுகிறது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ குழுவினர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் நாராயணன், குலசை ஏவுதளம் குறித்த தகவலை வெளியிட்டார்.
Next Story
