ரோபோடிக் ஆய்வகத்தில் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்

x

கூடலூர் அடுத்த புளியம்பாறையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியினரின் குழந்தைகள் அதிகளவில் படிக்கின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் சங்கரின் முயற்சியில், "MicroLand foundation" என்கிற நிறுவனத்தின் மூலம் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரத்யேக ரோபோடிக் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில்கூட காண முடியாத வகையில், சிறிய வகை ரோபோக்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 3டி தொழில்நுட்ப இயந்திரங்கள் மூலமும் பயிற்சி அளிக்கப்படுவதுடன், மாணவர்களே கணினியில் கோடிங், புரோகிராமிங் செய்து ரோபோக்களை இயக்கி அசத்துகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்