ATM-க்கு பணம் எடுக்க நுழைபவர்களிடம் நூதன முறையில் கொள்ளை..

x

ஏ.டி.எம். கார்டுகள் மூலம் நூதனமாக பணம் கொள்ளை - 2 பேர் கைது

திருப்பத்தூரில் ATM மையங்களில் பணம் எடுப்பது போல நாடகமாடி, நூதன முறையில் கொள்ளை அடித்து வந்த கர்நாடகாவை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். ATM-ல் பணம் எடுத்து தருவதாக கூறி நாடகமாடி, போலி ATM கார்டை வழங்கி ஏமாற்றி, வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை கொள்ளை அடித்த பெங்களூரு, அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், கோடப்பள்ளி பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் ஆகிய 2 பேரையும் வாணியம்பாடி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த 70 ATM கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்