ஹெட் கான்ஸ்டபிள் வீட்டில் கொள்ளை.. ``கொள்ளையர் யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..''
நெல்லை பாளையங்கோட்டையில் காவலர் குடியிருப்பிலுள்ள, தலைமை காவலர் வீட்டில் கொள்ளை அடித்த ஆயுதப்படை காவலர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர். காவல் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில், தலைமை காவலர் தங்கமாரி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு 25 பவுன் நகை திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் காவவலர்கள் விசாரனை நடத்தியதில் கொள்ளையடித்தது, காவல் ஆயுதப் படையில் பணி புரியும் மணிகண்டன் என்பது தெரிந்தது. மேலும் அவரை விசாரித்ததில், அவரது நண்பர் அசாருதீனுடம் சேர்ந்து திட்டம் தீட்டி கொள்ளை அடித்தததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் 25 பவுன் நகையை மீட்டனர்.
Next Story
