சாம் ஜெபராஜ் என்பவர் சாலை பாதுகாப்பு போலீஸ் என கூறி அடையாள அட்டையை காட்டிவிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். உயர் அதிகாரியை சந்திப்பதற்காக அவர் காத்திருந்த போது அவரது அடையாள அட்டையை வாங்கி சோதனை செய்ததில் அது போலியானது என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். கல்லூரி விழாவிற்காக காவல் ஆணையரை அழைத்து வருவதாக உறுதியளித்து கல்லூரி முதல்வர் ஒருவரையும் அவர் உடன் அழைத்து வந்துள்ளது தெரியவந்தது. போலி அடையாள அட்டையுடன் வந்த அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.