Road Accident | TN Police | டேங்கர்-டிப்பர் லாரிகளுக்கு இடையே.. டூவீலரோடு சிக்கிய முதியவர்
Road Accident | TN Police | டேங்கர்-டிப்பர் லாரிகளுக்கு இடையே.. டூவீலரோடு சிக்கிய முதியவர்.. நடுங்க வைக்கும் காட்சி திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே டேங்கர் லாரிக்கும், டிப்பர் லாரிக்கும் இடையே இருசக்கர வாகனம் சிக்கிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியாகியுள்ளன... அதனை பார்க்கலாம்.. ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கத்தில் சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்ற மோகன் என்பவர், டிப்பர் லாரியை முந்த முயன்றுள்ளார். அப்போது, எதிர் திசையில் டிப்பர் லாரி வந்ததால், இரண்டு லாரிகளுக்கும் இடையே பைக்கில் சென்ற மோகன் சிக்கியுள்ளார். இதையறிந்த டிப்பர் லாரி ஓட்டுநர் உடனடியாக லாரியை நிறுத்தியதால் மோகன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். பின்னர் அப்பகுதி மக்கள் முதியவர் மோகனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
