Road Accident | PowerCut | ஆம்னி வேன் மோதி.. 3 துண்டுகளாக உடைந்த மின்கம்பம்-பரபரப்பு மீட்பு காட்சி

Road Accident | PowerCut | ஆம்னி வேன் மோதி.. 3 துண்டுகளாக உடைந்த மின்கம்பம்-பரபரப்பு மீட்பு காட்சி

Road Accident | PowerCut | ஆம்னி வேன் மோதி.. 3 துண்டுகளாக உடைந்த மின்கம்பம்-பரபரப்பு மீட்பு காட்சி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, ஆம்னி வேன் மோதியதில் உயர் அழுத்த மின்கம்பம் மூன்று துண்டாக உடைந்து விழுந்தது. இதனால், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. அச்சனம்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல், அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது ஆம்னி வேனில், கடைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வேடசந்தூர் நோக்கி சக்திவேல் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீராமபுரம் தனியார் மில் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன், சாலையோரம் இருந்த உயர் மின்னழுத்த மின் கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மின்கம்பம் மூன்று துண்டுகளாக உடைந்து, மின்கம்பிகள் சாலையின் நடுவே விழுந்தன. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்தில் சிக்கிய வேனை அப்புறப்படுத்தினர். மேலும் காயமடைந்த சக்திவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உடைந்து சேதமான மின்கம்பத்தை அகற்றும் பணியில், மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்

X

Thanthi TV
www.thanthitv.com