"தடையாக இருப்பது ஆளுநர் தான்"-அமைச்சர் பரபரப்பு பேட்டி..
"உயர்கல்விக்கு தடையாக இருப்பது ஆளுநர் தான்"
உயர்கல்வித்துறை செயல்பாடுகளுக்கு ஆளுநர் தடையாக இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் குற்றம் சாட்டினார். சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,
பெரும்பான்மை மிகுந்த ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களை ஆளுநர் தன்வசப்படுத்தி மிரட்டி ஒருதலைபட்சமான முறையில் நடந்து கொள்வதால் தான், உயர்கல்வித்துறையில் சில இடர்பாடுகள் வருவதாக தெரிவித்தார். மாற்றாந்தாய் மனப்போக்குடன் ஆளுநர் செயல்படுவதாகவும்,
பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பற்றாக்குறை உட்பட உயர்கல்வித்துறைக்கு தடையாக இருப்பது ஆளுநர் தான் என்றும் குற்றம் சாட்டினார்
Next Story
