RN Ravi | ``ஏன் இதை பாடத்திட்டத்தில் சேர்க்க கூடாது?’’ - ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி
பறை இசை குறித்து ஏன் பாடத்திட்டத்தில் சேர்க்க கூடாது - ஆளுநர் கேள்வி. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டுமலையில் பத்ம ஸ்ரீ வேலு ஆசானுக்கு புதிய குடியிருப்புடன் கூடிய பாரதி பறை பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அதனை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். முன்னதாக ஆளுநரை 100க்கும் மேற்பட்ட பறை இசை கலைஞைர்கள் பறை அடித்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து வேலு ஆசானும், ஆளுநரும் ஒன்றாக பறையடித்து மகிழ்ந்தனர். விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பறை இசை குறித்து பாடத்திடத்தில் ஏன் சேர்க்க கூடாது என்று கேள்வி எழுப்பி,அதனை அறிவியில் பூர்வமாக ஆராய்ச்சி மேற்கொள்ளவும் வலியுறுத்தி உள்ளார்.
Next Story
