RJ Balaji | Tiruvannamalai | அண்ணாமலையார் கோயிலில் மனமுருகி வேண்டிய ஆர்.ஜே.பாலாஜி
RJ Balaji | Tiruvannamalai | அண்ணாமலையார் கோயிலில் மனமுருகி வேண்டிய ஆர்.ஜே.பாலாஜி | செல்பி கேட்ட ஸ்பெயின் நாட்டினர்
அண்ணாமலையார் கோயிலில் ஆர்.ஜே.பாலாஜி தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பிரபல இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி தனது மனைவியுடன் இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகதை தந்தார். முன்னதாக விநாயகரை வணங்கிய அவர் தொடர்ந்து உண்ணாமலையம்மன் உடனுறை அண்ணாமலையாருக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்துகொண்டு வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் திருக்கோவிலில் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பின்னர் கோவில் கொடிமரம் முன்பு தரிசனம் செய்த ஆர்.ஜே பாலாஜியுடன், ஸ்பெயின் நாட்டினர் செல்பி எடுத்து மகிழ்ந்தார். அதோடு மட்டுமில்லாமல் கோவிலுக்கு வந்திருந்த இயக்குனர் ஆர் ஜே பாலாஜியுடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அடுத்த படத்தின் அப்டேட் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், ஓம் நமசிவாய என பதிலளித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.
