ரிதன்யா பெற்றோர் அதிமுக்கிய அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, வரதட்சணை வன்கொடுமை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு, உயிரிழந்த ரிதன்யாவின் பெயரில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்பட உள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். வரதட்சணை வன்கொடுமை காரணமாக ரிதன்யா உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில், சொந்த ஊரான கைகாட்டிப்புதூரில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும், தமிழகத்தில் வரதட்சணை மற்றும் வன்கொடுமை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கும் மையம் துவங்கப்படும் என ரிதன்யாவின் பெற்றோர் அறிவித்துள்ளனர்.
Next Story
