ரிதன்யா கணவர், மாமனார், மாமியாருக்கு கிடைத்த ஜாமின்- கண்கலங்கி தந்தை அறிவிப்பு
நீதி கிடைக்கும் வரை சட்ட போராட்டம் - ரிதன்யா தந்தை அறிவிப்பு
நீதி கிடைக்கும் வரை சட்ட போராட்டம் தொடரும் என ரிதன்யாவின் தந்தை தெரிவித்துள்ளார். வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவர் குடும்பத்தினருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரிதன்யாவின் தந்தை, அவர்களுக்கு ஜாமின் வழங்கியது வருத்தம் அளிப்பதாக கூறினார். இருப்பினும், நீதி கிடைக்கும் வரை தனது சட்டப் போராட்டம் தொடரும் என கண்கலங்கிய படி கூறினார்.
