Ribbon Building || மீண்டும் போராட்டம்? தூய்மை பணியாளர்கள் கைது

சென்னை ரிப்பன் மாளிகைக்கு மனு அளிக்க வந்த மண்டலம் ஐந்து மற்றும் ஆறை சேர்ந்த தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். தங்களுக்கு பழைய முறைப்படி பணி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து, தூய்மை பணியாளர்கள் மனு அளிக்க வருவதாக தகவல் வெளியானது. இதனால் ரிப்பன் மாளிகையின் அனைத்து நுழைவு வாயில்களிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அவர்கள் தடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர்

X

Thanthi TV
www.thanthitv.com