Accident | Death | சாவு வீட்டுக்கு சென்று திரும்பியவர்கள் கோர சாவு - நடந்தத கேட்டாலே இதயம் நடுங்குது
துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வந்த இருவர் விபத்தில் பலி
திருவண்ணாமலையில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வந்த இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேல் சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்த சிலர் ஊசாம்பாடி கிராமத்திற்கு உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக வாகனத்தில் சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். பூண்டி அருகே, எதிரே வந்த வாகனத்தில் கட்டப்பட்டிருந்த பந்தல் அமைக்கும் கம்பிகள் இவர்கள் சென்ற வாகனத்தின் மீது விழுந்துள்ளது. அப்போது கம்பி குத்தியதில் துளசி மற்றும் வேண்டா என்ற இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
