

வரும்15 ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, அவனியாபுரத்தில் ஒய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில், மதுரை ஆட்சியர், மாநகர காவல் ஆணையாளர், மாநகராட்சி ஆணையர் அடங்கிய குழு ஜல்லிக்கட்டை நடத்தும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், அவனியாபுரம் கிராமத்தை சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு கிராம கமிட்டி போட்டியை நடத்தும் என கூறியுள்ளது. பாலமேட்டில் ஒய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான மேற்பார்வையில், மகாலிங்க சுவாமி மடத்து குழு ஜல்லிக்கட்டை நடத்தும் எனவும் தெரிவித்துள்ளது.
அலங்காநல்லூரிலும் நீதிபதி தலைமையில் ஆட்சியர், தென் மண்டல காவல் தலைவர், மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநர் அடங்கிய குழு மற்றும் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் போட்டியை நடத்துவார்கள் என தெரிவித்துள்ளது.