சென்னையில் Retd IAS கார் மோதி சிறுவனுக்கு விபரீதம் - கொதிக்கும் தந்தை
சென்னை விருகம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் கார் மோதியதில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். தன்வித் என்ற 9 வயது சிறுவன் விருகம்பாக்கம் நடேசன் நகர் 2வது பிரதான சாலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் குடியிருப்பு அருகே சைக்கிளில் சென்ற போது ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ஜோதி நிர்மலா சாமியின் கார் மோதியதில் சிறுவன் காலில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். இந்த நிலையில் மாணவனை விசாரிக்க கூட யாரும் வந்து பார்க்கவில்லை என சிறுவனின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Next Story
