பழிக்குப்பழி - அதிமுக நிர்வாகி படுகாலை - 3 பேர் கைது
சென்னை, டி.பி சத்திரம் பகுதியில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோதி அம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் என்கிற புல்கான். இவர் அதிமுகவில் பகுதி இணைச் செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், இவர் வீட்டிற்குள் புகுந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று, இவரை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு குற்றாவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், கல்லூரி மாணவர்,17 வயது சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தந்தை கொலைக்கு பழிக்குப்பழியாக 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலையை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது.
