Dog | Central | பகலில் ரெஸ்ட்.. நைட் ஷிப்ட் டூட்டி.. சென்னை சென்ட்ரலில் RPF நண்பன் டைகர் -"உள்ள போ.."
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், குற்றச்செயலில் ஈடுபடுவோரை பிடிக்க ரயில்வே போலீசாருக்கு, தெரு நாய் ஒன்று உதவி வருகிறது.
சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்திற்கு, இரண்டு வருடங்களுக்கு முன்பாக குட்டியாக வந்த, தெரு நாய்க்கு டைகர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பசிக்கு உணவளித்த நன்றிக் கடனுக்காக அங்குள்ள போலீசாருக்கு விசுவாசமாக இருந்து வருகிறது.
ரயில்வே போலீசார் இரவுப்பணியில் ஈடுபடும்போது அவர்களுக்கு உதவி செய்யும் டைகர், பகலில் காவல் நிலையத்திலேயே ஓய்வு எடுக்கிறது.
சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்களில் பயணிகள் எவரேனும் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் அவர்களை எச்சரிக்கும் வகையில் கடிப்பதுபோல் இந்த தெருநாய் டைகர் பயம் காட்டுகிறது.
Next Story
