

துணை மேயர், துணை தலைவர் பதவிகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி முன்னாள் எம்.எல்.ஏ. செ.கு.தமிழரசன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி துறை செயலாளர், மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழரசன் தாக்கல் செய்த மனுவில், 15 மாநகராட்சிகள், 33 மாவட்ட பஞ்சாயத்துக்கள் உள்பட மொத்தம் 13 ஆயிரத்து 870 பதவிகள் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார். இதுதவிர, உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு நிலைக் குழுக்கள் உள்ளதாகவும் அந்த குழுக்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்றும் செ. கு. தமிழரசன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.