7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து உள்ளது.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
Published on

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்வதற்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதன்படி மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இட ஒதுக்கீட்டால், அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. நீட் தேர்வில் 300 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் இடம் கிடைப்பதால், தரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு நடைபெற்று வருவதால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர், கலந்தாய்வு முடிந்துவிட்டதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க இயலாது என்றும், விசாரணைக்கு பட்டியலிடும் போது விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com