

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில், ஆங்கிலம், இந்தி உடன் தமிழும் அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், திருச்சி ரயில் நிலையத்தில் வழங்கப்பட்ட முன்பதிவு படிவத்தில் ஆங்கிலம், இந்தி தவிர மலையாள மொழியும் இடம்பெற்றிருந்தது. இதனால் தமிழ் மட்டும் தெரிந்த பயணிகள் படிவத்தை பூர்த்தி செய்ய முடியாமல் திணறினர். இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, கேரள மாநிலத்துக்கு அனுப்ப வேண்டிய முன்பதிவு படிவங்கள் தமிழகத்திற்கு மாற்றி அனுப்பிவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தமிழ் ஆர்வலர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.