Rescue | திடீரென இடிந்த வீடு.. உள்ளே சிக்கிய இருவர்.. உயிருடன் மீட்கப்பட்ட திக் திக் காட்சி

Rescue | திடீரென இடிந்த வீடு.. உள்ளே சிக்கிய இருவர்.. உயிருடன் மீட்கப்பட்ட திக் திக் காட்சி

Rescue | திடீரென இடிந்த வீடு.. உள்ளே சிக்கிய இருவர்.. உயிருடன் மீட்கப்பட்ட திக் திக் காட்சி

நாமக்கல்லில் பழைய வீட்டை இடிக்கும் போது, கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கிய தொழிலாளிகள் 2 பேரை, அரைமணி நேரம் போராடி, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். பழைய முன்சீப் கோர்ட் தெருவில் அம்சவள்ளி என்பவருக்கு சொந்தமான பழமையான வீட்டை அலங்காநத்தம் பகுதியை சேர்ந்த கட்டிடம் உடைக்கும் தொழிலாளிகள் உதயா, மணி இருவரும் டிரில்லர் இயந்திரம் கொண்டு உடைக்கும் பணியில் ஈடுபட்ட போது, திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில், உதயா, மணி இருவரும் இடிபாட்டுக்குள் சிக்கிக்கொண்டனர். இருவரின் அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, குழுவினர் விரைந்து வந்து, சுமார் அரைமணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ​மீட்டனர். படுங்காயமடைந்த தொழிலாளர்கள் 2 பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com