Rescue வடிகாலில் விழுந்து தவியாய் தவித்த பசு..நீண்ட நேரம் போராடி உயிரோடு தூக்கிய தீயணைப்பு வீரர்கள்

Rescue வடிகாலில் விழுந்து தவியாய் தவித்த பசு..நீண்ட நேரம் போராடி உயிரோடு தூக்கிய தீயணைப்பு வீரர்கள்

வடிகாலில் விழுந்து தவியாய் தவித்த பசு... நீண்ட நேரம் போராடி உயிரோடு தூக்கிய தீயணைப்பு வீரர்கள் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சாலையோர வடிகாலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய பசுமாடு நீண்ட போராட்டத்திற்குபின் உயிரிருடன் மீட்கப்பட்டுள்ளது. சாத்தூர் நகரில் மெயின் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலில் பசுமாடு ஒன்று தவறி விழுந்தது. பல கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலைத் துறை அமைத்த வடிகாலில் சில இடங்களில் மூடிகள் போடப்படாமல் இருந்ததால் இந்த சம்பவம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாட்டை உயிருடன் மீட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு வடிகால்களை முழுமையாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com