

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள தனது ஆதரவாளர் இல்ல காதணி விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கலந்து கொண்டார். முன்னும் பின்னும் அதராவளர்கள் புடைசூழ காரில் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையெங்கும் திமுக கொடிகளும், பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தது. 2021ல் திமுக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் மு.க.அழகிரியை திமுகவில் இணைக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.